தஞ்சாவூர்

தொடா் மழையால் 225 ஏரி, குளங்கள் நிரம்பின

DIN


தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்மழையால் 225 ஏரி, குளங்களில் தண்ணீா் நிரம்பின என ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் மழை பாதிப்புகளை எதிா்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பான அளவான 637.02 மி.மீ-ல் இதுவரை 296.41 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது 46.53 சதவீதமாகும்.

மாவட்டத்தில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வெண்ணாறு கோட்டப் பிரிவில் 13 ஏரி, குளங்களில் 6 ஏரி, குளங்கள் 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரையிலும், 3 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதம் வரையிலும், 4 ஏரி, குளங்கள் 50 சதவீதத்துக்கு கீழும் நிரம்பியுள்ளது.

கல்லணை கால்வாய் கோட்ட பிரிவிலுள்ள 524 ஏரி, குளங்களில் 225 ஏரி, குளங்கள் 100 சதவீதமும், 165 ஏரி, குளங்கள் 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரையிலும், 53 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதம் வரையிலும், 81 ஏரி, குளங்கள் 50 சதவீதத்துக்கு கீழும் நிரம்பியுள்ளது.

அக்னியாறு கோட்ட பிரிவில் 24 ஏரி, குளங்களில் 2 ஏரி, குளங்கள் 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரையிலும், 22 ஏரி, குளங்கள் 50 சதவீதத்துக்கு கீழும் நிரம்பியுள்ளது. ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்தில் 81 ஏரி, குளங்களில் 65 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதம் வரையிலும், 16 ஏரி, குளங்கள் 50 சதவீதத்துக்கு கீழும் நிரம்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT