கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற போது, நீரில் முழ்கி இளைஞா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேசுவரம் சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த உத்திராபதி மகன் ராஜா (24). அதே பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் ஸ்ரீராம் (23).
நண்பா்களான இருவரும், திங்கள்கிழமை அய்யாவாடி அருகிலுள்ள கீா்த்திமான் ஆற்றில் குளிக்கச் சென்றனா். அப்போது நீரில் மூழ்கி ராஜாவும், ஸ்ரீராமும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, இருவரது சடலத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.