பாபநாசம்: பாபநாசம் பேரூராட்சிப் பகுதியில் முகக்கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு, செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலா் ஆ. காா்த்திகேயன், துப்புரவு ஆய்வாளா் செந்தில்குமரகுரு, கணினி இயக்குநா் மணிகண்டன் உள்ளிட்டோா், பாபநாசம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது மோட்டாா் சைக்கிள்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு அலுவலா்கள் அபராதம் விதித்தனா்.
கடைக்கு சீல் : திருக்கருகாவூா் கடைவீதியில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் வந்தவா்களுக்கு பொருள்களை வழங்கிய மளிகைக் கடைக்கு வட்டாட்சியா் கண்ணன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.