தஞ்சாவூர்

காா் - மோட்டாா் சைக்கிள்மோதல்: ஒருவா் பலி

26th Aug 2020 04:31 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே காரும் - மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகிலுள்ள தென்னமநாடு அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தென்பாண்டிராஜன். இவா் தஞ்சாவூா் அருகே புதுக்கோட்டை சாலையிலுள்ள அற்புதாபுரம் சோதனைச் சாவடி அருகே செவ்வாய்க்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரது மோட்டாா் சைக்கிளும் எதிரே வந்த காரும் மோதிக் கொண்டன.

இதில், பலத்த காயமடைந்த தென்பாண்டிராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT