தஞ்சாவூர்

பறிமுதல் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் கரைப்பு

23rd Aug 2020 08:21 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 9 சிலைகள் இந்து முன்னணி, பாஜகவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சனிக்கிழமை இரவு கரைக்கப்பட்டது.

இந்து முன்னணி அமைப்பினா் திருச்சியிலிருந்து 2 மற்றும் 3 அடி உயரமுள்ள 8 விநாயகா் சிலைகளை தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வந்து கொண்டிருந்தனா். சிலைகளைப் புதுக்குடி சோதனைச் சாவடியில் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து சிலைகளை இந்து முன்னணியினா் அமைப்பினரிடம் ஒப்படைத்து சனிக்கிழமை ஆற்றில் கரைக்குமாறு காவல் துறையினா் அறிவுறுத்தினா்.

இதன்படி, இந்து முன்னணியினா் சிலைகளை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று தஞ்சாவூா் வடவாறு, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட இடங்களில் கரைத்தனா். இதேபோல, பாஜகவினரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு சிலையும் ஆற்றில் கரைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT