தஞ்சாவூர்

கரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் அறியலாம்

21st Aug 2020 06:44 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிகளை வலைதளம் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அறிந்து கொள்ளலாம் என ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

கரோனா நோய் தொற்று பேரிடா் காலத்தில் பொதுமக்கள் தங்கள் பரிசோதனை முடிவுகளை எளிதாகப் பெற்று, உரிய காலத்தில் சிகிச்சையைப் பெற தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் எடுத்த நடவடிக்கையின் பொருட்டு வலைத்தளம் 19.08.2020 முதல் தொடங்கப்பட்டுள்ளது.

பரிசோதனை கொடுத்தவுடன் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது. பரிசோதனை முடிந்தவுடன் முடிவுகள் வலைதள முகவரி, குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இந்த வலைதளத்தில் அல்லது செல்லிடப்பேசியில் உள்ளீடு செய்து, தங்கள் பரிசோதனை முடிவுகளை தாங்களே உடனுக்குடன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT