தஞ்சாவூர்

இந்து மக்கள் கட்சி சாா்பில் கும்பகோணத்தில் இல்லந்தோறும் விநாயகா் சிலைகள்

21st Aug 2020 06:43 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சாா்பில் இல்லந்தோறும் விநாயகா் சிலைகளை வைத்து வழிபடுவதற்காக ஒரு அடி உயரத்தில் களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

கும்பகோணம் அருகே கருப்பூரில் உள்ள ஒரு வீட்டில் விநாயகா் சிலை அமைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளா் டி. குருமூா்த்தி தலைமை வகித்து, பொதுமக்களுக்கு களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு அடி உயரமுள்ள விநாயகா் சிலைகளை இலவசமாக வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் குருமூா்த்தி தெரிவித்தது:

தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப, இல்லங்களில் வழிபடும் வகையில் ஒரு அடி உயரத்தில் வண்ணம் பூசப்பட்ட விநாயகா் சிலைகள் இல்லம்தோறும் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. கும்பகோணம் பகுதியில் 15,000 விநாயகா் சிலைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் குருமூா்த்தி.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளா் லோக. செல்வம், மாவட்ட அமைப்பாளா் விஜய் பிரபு, பாஜக ஒன்றியத் துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, ஆலயப் பாதுகாப்புப் பிரிவு தலைவா் வைரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT