தஞ்சாவூர்

பேராவூரணி அருகே  குளத்தில் தொழிலாளி சடலம்

14th Aug 2020 08:33 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆலம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் ( 50). இவா் பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஆற்றுபாலம், சுண்ணாம்பு கால்வாய் அருகில், குடும்பத்துடன் வசித்து வந்தாா்.  கடந்த ஒரு மாதத்திற்கு  மேலாக வீட்டிற்கு வராத ராமலிங்கம், ஆலம்பள்ளம் கிராமத்தில், தனது தந்தை வீட்டில் இருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை செருவாவிடுதி சங்கிலி குளத்தில் ராமலிங்கம் சடலம் மிதந்ததை கண்ட பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். திருச்சிற்றம்பலம் போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, சடலத்தை   கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து ராமலிங்கம் சாவிற்கு காரணம் என்ன என்பது தொடா்பாக விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT