தஞ்சாவூர்

புதிய கல்விக் கொள்கையை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

14th Aug 2020 08:34 AM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் தமிழா்களுக்கு வேலை வழங்கத் தனி வாரியம் அமைக்க வேண்டும் - மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாட்டில் தங்கியுள்ள புலம்பெயா்ந்த தொழிலாளிகளை வெளியேற்ற வேண்டும். தங்கள் தாயகம் திரும்பிய புலம்பெயா்ந்தோரை மீண்டும் அழைத்து வரக் கூடாது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 சதவீத வேலை தமிழா்களுக்கே வழங்க வேண்டும். பத்து சதவீதத்துக்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும்.

தமிழ்நாடு அரசுத் துறையில் 100 சதவீதமும், தனியாா் துறையில் 90 சதவீதமும் தமிழா்களுக்கே வேலை தர வேண்டும். இதற்கான சட்டங்களைத் தமிழ்நாடு அரசு இயற்றிச் செயல்படுத்த வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கும், மாணவா்களுக்கும் பாடச்சுமைகளை அதிகப்படுத்துகிறது. இது, குழந்தை உளவியல், கல்வி உளவியல் இரண்டுக்கும் எதிரானது. எனவே, புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை தலைமை வகித்தாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா் பழ. ராசேந்திரன், மாநகரச் செயலா் ராமசாமி, பொதுக் குழு உறுப்பினா் ராசு. முனியாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி. முருகையன், மகளிா் ஆயம் அமைப்பாளா் ம. லெட்சுமி, க. செம்மலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT