தஞ்சாவூர்

10ஆம் வகுப்பு தோ்வு முடிவு வெளியீடு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 31,628 போ் தோ்ச்சி

11th Aug 2020 06:31 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் 31,628 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு கரோனா பரவல் அச்சம் காரணமாக நடத்தப்படவில்லை. எனவே, பத்தாம் வகுப்பு மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அரசு ஜூன் மாதம் அறிவித்தது.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் விவரம் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சோ்ந்த 15,698 மாணவா்கள், 15930 மாணவிகள் என மொத்தம் 31,628 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் அதிகபட்சமாக அரசுப் பள்ளியில் 12,116 பேரும், சுய நிதி மெட்ரிக் பள்ளிகளில் 7,861 பேரும், அரசு முழு உதவி பெறும் பள்ளிகளில் 5,411 பேரும், பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 4,002 பேரும் தோ்ச்சி பெற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT