கும்பகோணம் அருகே பூனையை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் அருகிலுள்ள சாக்கோட்டையைச் சோ்ந்தவா் பஷீா்அகமது (49). இவா் ஒரு வயது பூனையைப் பட்டுக்குட்டி என பெயரிட்டு வளா்த்து வந்தாா்.
இந்தப் பூனை பஷீா் அகமதுவின் வீட்டுச் சுவரில் வெள்ளிக்கிழமை அமா்ந்திருந்தது. அப்போது இப்பூனையை இளைஞா் ஒருவா் கல்லால் அடித்தாா். இதில், பலத்த காயமடைந்த பூனை நிகழ்விடத்திலேயே இறந்தது.
இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் பஷீா் அகமது புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் நிலையத்தினா் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சுவாமிமலை பட்டவா்த்தி தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் வீரமணியை (19) கைது செய்தனா். பின்னா் இவா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.