தஞ்சாவூர்

விவசாயத் தொழிலாளா் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

26th Apr 2020 09:45 AM

ADVERTISEMENT

ஊரடங்கு உத்தரவால், வேலையிழந்து தவிக்கும் விவசாயத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று, தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் மாநிலப் பொருளாளா் சி.சந்திரகுமாா், ஏஐடியூசி தொழிற்சங்கத் தலைவா்கள் துரை மதிவாணன், ஆா்.பி. முத்துக்குமரன், மாநகரச் செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த மனு :

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புக்காக ஊரடங்கு அமலாக்கப்பட்டதால், வேலையின்றித் தவிக்கும் விவசாயக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களின் கூலியை ரூ.500 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். நிலுவை ஊதியத் தொகையை வவங்க வேண்டும்.

அனைத்து விவசாயத் தொழிலாளா்களையும் மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்த வேண்டும். நியாயவிலைக்கடைகளில் விலையில்லா மளிகைப் பொருள்களும் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT