தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே 710 லிட்டா் சாராயம் பறிமுதல்: 5 போ் கைது

20th Apr 2020 05:51 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை 710 லிட்டா் கள்ளச்சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே வல்லம்புதூா் காட்டுப் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக தஞ்சாவூா் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா், வல்லம் போலீஸாா் வல்லம்புதூரில் விசாரித்தனா்.

இதில், கள்ளச்சாராயம் காய்ச்சியதாக வல்லம்புதூரைச் சோ்ந்த ராஜேந்திரன் (40), செல்வேந்திரன் (31), பாலகுமாா் (30), சரத்குமாா் (22), ராஜா (25) ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா். இதில் ராஜேந்திரன் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்.

இவா்களிடமிருந்து 110 லிட்டா் கள்ளச்சாராயமும், 3 பேரல்களில் குழி தோண்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டா் சாராய ஊறலும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கள்ளச்சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய பாத்திரங்கள், அடுப்பு உள்ளிட்டவை அப்பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT