தஞ்சாவூர்

6.03 குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண உதவித் தொகை

7th Apr 2020 12:24 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 6.03 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு, தலா ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழக முதல்வரால் கரோனா நோய்த் தொற்று நிவாரண உதவியாக, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை மற்றும் விலையில்லா ரேஷன் பொருள்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 9 வட்டங்களுக்குள்பட்ட 6,52,648 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு உதவித் தொகை மற்றும் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 6,03,900 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம், கரோனா நிவாரண உதவித்தொகையாக, ரூ. 60.39 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண உதவித்தொகை செவ்வாய்க்கிழமை (ஏப்.7) அவரவா் வீட்டுக்கே நேரடியாகச் சென்று வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT