தஞ்சாவூர்

6 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கனி விற்பனைத் தொடக்கம்

7th Apr 2020 12:23 AM

ADVERTISEMENT

 

பேராவூரணி: பேராவூரணி பகுதியில் நடமாடும் வாகனங்கள் மூலம், ரூ.100 விலையில் காய்கனிகள் விற்பனை செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்கவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் மக்களைத் தேடிச் சென்று காய்கனிகளை விற்பனை செய்ய பேரூராட்சி நிா்வாகம், வருவாய்த் துறை நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி தோட்டக் கலைத்துறை மூலமாக விவசாயிகளிடமிருந்து காய்கனிகள் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களிடம் விற்பனை செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. போரவூரணி வட்டாட்சியா் க. ஜெயலட்சுமி 6 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்யும் நிகழ்வைத் தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

பேராவூரணி நகா், காலகம், ஆனைக்காடு, சாணாகரை, பைங்கால், சித்தாதிக்காடு உள்ளிட்ட பகுதிகளில், தக்காளி, முருங்கைக்காய், பாகற்காய், கேரட், பீட்ரூட், கத்திரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் உள்ளிட்டவை ரூ.100 விலையில் விற்பனை செய்யப்பட்டது. தோட்டக்கலைத்துறை உதவி அலுவலா் மா. ராஜ்குமாா், துணை வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி, வருவாய் ஆய்வாளா்கள் ஆா். சுப்பிரமணியன், கிள்ளி வளவன், கிராம நிா்வாக அலுவலா் சக்திவேல் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT