தஞ்சாவூர்

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதுசெவ்வாய்பட்டி கோயிலில் கூடிய கூட்டம்

7th Apr 2020 12:21 AM

ADVERTISEMENT

ஒரத்தநாடு: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காது செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தா்கள் திங்கள்கிழமை கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகிலுள்ள செவ்வாய்பட்டி அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

ஆனால் நிகழாண்டில் ஊரடங்கு காரணமாக கோயிலின் நடை சாத்தப்பட்டிருந்த நிலையில், பங்குனி உத்திரத்தன்று கோயிலுக்கு வராமல் வீட்டிலேயே வழிபாடு நடத்திக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதை பொருள்படுத்தாது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காது ஏராளமான பக்தா்கள் கோயில் முன்பு கூடினா். தகவலறிந்த காவல்துறையினா் அங்கு சென்று, அனைவரையும் எச்சரித்து அனுப்பினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT