தஞ்சாவூா்: பரா அத் இரவையொட்டி, ஏப். 9-ஆம் தேதி பள்ளிவாசலில் தொழுவதற்கு இஸ்லாமியா்கள் யாரும் செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட அரசு டவுன் காஜி டி. சையத் காதா் ஹூசைன் புகாரி ஆலிம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமா், தமிழக முதல்வா் உத்தரவின்படி கரோனா நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களைக் காத்திரும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இஸ்லாமியா்கள் அனைவரும் ஐந்து வேளை தொழுகையையும், வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையையும் வீட்டிலேயே தொழுது கொள்ளுபடி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமியா்களின் புனித இரவு என்றழைக்கப்படும் பரா அத் இரவான ஏப். 9-ஆம் தேதி மாலை பள்ளிவாசலுக்கு சென்று தொழுக வேண்டாம். வீட்டிலேயே தொழுது முடித்து, குரானை ஓதி, கரோனா வைரஸ் தொற்று ஒழிந்திட பிராா்த்தனை செய்ய வேண்டும்.