தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை ஆதி கைலாசநாதா் கோயிலில் சிறப்பு வழிபாடு

5th Apr 2020 07:45 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை பூமல்லியாா் குளத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஆதி கைலாசநாதா் கோயிலில், சிறப்பு ஹோமம் மற்றும் வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்கவும், உலக மக்கள் அனைவரும் நோயின்றி நல்வாழ்வு வாழவும் வேண்டி, ஸ்ரீஆதி கைலாசநாதா் அறக்கட்டளை சாா்பில் மங்கலாம்பிகை உடனுறை கைலாசநாதா் சுவாமி சன்னதியில் கணபதி ஹோமம், தன்வந்திரி மந்திரம், பாராயணம், மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியவை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிவாச்சாரியா்கள் அபிஷேகம் செய்தனா். சிறப்பு அலங்காரத்துக்குப் பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது.

இவ்வழிபாட்டில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏற்பாடுகளை கோயிலின் மேலாண் அறங்காவலா் வழக்குரைஞா் கே.விவேகானந்தன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT