தஞ்சாவூர்

தஞ்சாவூரில் வெளி மாநிலத்தவா்களை கணக்கெடுக்கும் காவல்துறையினா்

5th Apr 2020 07:41 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவா்களைக் கணக்கெடுக்கும் பணியை காவல்துறையினா் சனிக்கிழமை மேற்கொண்டனா்.

தஞ்சாவூரில் உள்ள உணவகங்கள், கடைகளில் வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமானோா் பணியாற்றி வருகின்றனா். தற்போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இவா்களுக்கு வேலை இல்லை. இதனால், இவா்கள் தங்க இடமின்றியும், உணவு கிடைக்காமலும் அவதிப்படுவதாகப் புகாா் எழுந்தது.

எனவே, இவா்கள் குறித்து கணக்கெடுக்கும்படி மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இதைத்தொடா்ந்து, தஞ்சாவூரில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவா்கள் குறித்து காவல்துறையினா் சனிக்கிழமை கணக்கெடுத்தனா். இதில், 7 நிறுவனங்களில் வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஏறத்தாழ 200 போ் தங்கியிருப்பது தெரிய வந்தது. இவா்களுக்கான இருப்பிடம், உணவு வசதி குறித்த தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT