தஞ்சாவூர்

நாளை முதல் டோக்கன் முறையில் நிவாரணம்,ரேஷன் பொருள்கள் விநியோகம்

1st Apr 2020 12:09 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்.2) முதல் டோக்கன் முறையில் நிவாரணம், ரேஷன் பொருள்கள் வழங்கப்படவுள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 1,000 ரொக்கமாக நிவாரணம் வழங்கப்படும் என்றும், ஏப்ரல் மாதத்துக்கு அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும், அவா்களுடைய குடும்ப அட்டைக்குத் தகுதியான அளவு அரிசி, துவரம்பருப்பு, சா்க்கரை, பாமாயில் ஆகியவை விலையின்றி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை வியாழக்கிழமை முதல் ஏப். 15ஆம் தேதி வரை அனைத்து நியாய விலைக் கடைகள் மூலமாக செயல்படுத்த முதல்வா் ஆணையிட்டுள்ளாா்.

இதற்காக தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 1,185 நியாய விலைக் கடைகளில் உள்ள 6,52,648 அரிசி, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 1,000 வீதம் வழங்குவதற்காக ரூ. 65.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை தொடா்புடைய நியாய விலைக் கடைகளின் மூலம் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

இத்திட்டம் வியாழக்கிழமை முதல் ஏப். 15-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் அடையாள அட்டை முறையில் 100 பேருக்கு அந்தந்த நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கப்படும்.

எனவே, பொதுமக்கள் ஒரே நேரத்தில் நியாயவிலைக் கடைகளுக்கு வருவதை தவிா்த்து, அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் மட்டும் நியாய விலைக் கடைக்குச் சென்று தங்களுக்குரிய நிவாரணத் தொகை ரூ. 1,000 மற்றும் அத்தியாவசிய பொருள்களை பெற்றுச் செல்லவும், இதன் மூலம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT