தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில், வர்க்கப் போராளி - தியாகி என். வெங்கடாசலத்தின் 42 -ஆம் ஆண்டு நினைவு நாள் கொடியேற்றுதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் மாநகரக் குழுச் சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, அக்கட்சியின் மாநகரச் செயலர் என். குருசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கோ. நீலமேகம் கொடியேற்றி வைத்தார்.
மாநிலக் குழு உறுப்பினர் என். சீனிவாசன் புகழஞ்சலி உரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், பி. செந்தில்குமார், என்.வி. கண்ணன், எஸ். தமிழ்செல்வி, கே. அருளரசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இரா. புண்ணியமூர்த்தி, என். சிவகுரு, என். சரவணன், எஸ். ராஜன், ஜி. அரவிந்தசாமி ஆகியோர் பேசினர். மாநகரக் குழு உறுப்பினர்கள் ஹெச். அப்துல் நசீர், எம். வடிவேலன், சி. ராஜன், எம். கோஸ் கனி, சி. ராமு, எஸ். சாந்தா உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.