தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டக் கூட்டுறவு ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு

22nd Sep 2019 03:35 AM

ADVERTISEMENT


தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தேர்தலில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டக் கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தேர்தல் கூட்டுறவு சார் பதிவாளர் மாரிமுத்து (தேர்தல் அலுவலர்) தலைமையிலும், கூட்டுறவு சார் பதிவாளரும் மேலாண்மை இயக்குநருமான ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில், தலைவராக எஸ். மோகன், துணைத் தலைவராக வீ. ராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இளமதி சுப்பிரமணியன், கே. மனோகரன், எம். சுவாமிநாதன், எம். மாரியய்யா, ஜி. கிருஷ்ணமூர்த்தி, செ. ராசகுமாரன், ஏ.கே. ரவி, சி. கார்த்திகேயன், என். கனகராஜ், ஆர். வெற்றிச்செல்வி, பி.ஆர். தவமணி, எம். ஜெயசித்ரா, பா. சாந்தி, பானுமதி, எஸ். வசந்தி, பெ. தட்சிணாமூர்த்தி, பழனிசாமி, சி. மனோகரன் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
பதவியேற்பு நிகழ்வில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராம. ராமநாதன், காவேரி கூட்டுறவுச் சிறப்பங்காடி தலைவர் வி. பண்டரிநாதன், அதிமுக ஒன்றியச் செயலர்கள் துரை. வீரணன், கோ. சாமிவேல், திருவையாறு என். இளங்கோவன், கும்பகோணம் சோழபுரம் கா. அறிவழகன், பகுதி செயலர்கள் வி. அறிவுடைநம்பி. எஸ். சரவணன்,   எஸ். ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT