தஞ்சாவூரில் ஸ்ரீ தியாகபிரம்ம சபா சார்பில், ஓணம் பண்டிகை சிறப்பு இசை நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், ஓணம் பண்டிகையின் மகிமை என்ற தலைப்பில் சபா துணைத் தலைவர் வி. கோபாலன் பேசினார். பின்னர், சாலியமங்கலம் ஜி. ராமதாஸ், தஞ்சாவூர் கே. ப்ரகாஷின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சென்னை ஆர். சுப்ரமணி வயலினும், தஞ்சாவூர் ஜி. சங்கர சுப்ரமணியன் மிருதங்கமும், திருச்சி கே. சேகர் கஞ்சீராவும், புதுக்கோட்டை எஸ். சோலைமலை கடமும், திருவையாறு பாலமுருகன் முகர்சிங்கும் வாசித்தனர்.