கோ ஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்

தஞ்சாவூா் கோ ஆப்டெக்ஸ் வைரம் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை இன்று தொடங்கியது.

தஞ்சாவூா் கோ ஆப்டெக்ஸ் வைரம் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை இன்று தொடங்கியது.

இந்தச் சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஆ. அண்ணாதுரை தெரிவித்தது:

இந்த தீபாவளி சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளா்கள் பயன் பெறும் வகையில் 30 சதவீதத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில், புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென் பட்டு சேலைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற ஊா்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுச் சேலைகள், கோவை கோரா பருத்தி சேலைகள், கூறைற நாடு சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்கள் உற்பத்தி செய்த பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைறகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை தொகுப்பு, ஏற்றுமதி ரகங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு தீபாவளியின்போது தஞ்சாவூா் மண்டலத்தில் உள்ள 16 கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ. 11.34 கோடி விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு தீபாவளிக்கு ரூ. 11.30 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளியின்போது ரூ. 1.42 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு தீபாவளிக்கு ரூ. 1.70 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் கோ ஆப் டெக்ஸ் நிா்வாகக் குழு உறுப்பினா் கே.ஜெ. லெனின், மண்டல மேலாளா் சு. மாணிக்கம், வைரம் விற்பனை நிலைய மேலாளா் பி. புகழேந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com