அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஓர் அங்கமான சிஷ்வா அமைப்பின் மூலம் பல்வேறு சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின் நீர்நிலைகளை பாதுகாத்து, பராமரித்து, மேம்படுத்துவதற்காக நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு முன்னெடுத்து செல்லும் அடுத்தக்கட்ட நீர்நிலை மேம்பாடு பணிகளுக்காக, சிஷ்வா அமைப்பின் அமீரக கிளை நிர்வாகிகள் மூலம் திரட்டப்பட்ட ரூ.50,000 நிதியை, சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம். முகமது அபூபக்கர் மற்றும் நிர்வாகிகள் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் எஸ்.எச். அஸ்லம், பொருளாளர் ஏ.எஸ். அகமது ஜலீல்
ஆகியோரிடம் சனிக்கிழமை வழங்கினர்.