தஞ்சாவூர்

பயணியிடம் பணப்பை திருடிய பெண் கைது

13th Sep 2019 09:51 AM

ADVERTISEMENT

ஒரத்தநாடு அருகே பேருந்தில் பயணியிடம் பணப் பையை திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:  ஒரத்தநாடு வட்டம், பாச்சூர் கிராமத்தை சேர்ந்த ரேணுகா மகள் ரஞ்சிதா (20). இவர்கள் இருவரும் புதன்கிழமை மன்னார்குடியிலிருந்து தனியார் பேருந்து மூலம் ஒரத்தநாடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். பேருந்து ஒரத்தநாடு நெருங்கும்போது ரேணுகா தனது கையில் இருந்த பண பையை தேடியுள்ளார். பை காணாமல்போனதால்,  உடனடியாக ஒரத்தநாடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில்,  அங்கு வந்த போலீஸார் பேருந்தில் சோதனை மேற்கொண்டனர். இதில்,  பேருந்தில் பயணம் செய்த மன்னார்குடியை சேர்ந்த  ஃபஹ்ருநிஷா என்ற பெண் ரேணுகாவின் பண பையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஃபஹ்ருநிஷாவை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT