தஞ்சாவூர்

லாரி மோதியதில் ஜவுளிக் கடை ஊழியர் பலி

7th Sep 2019 10:27 AM

ADVERTISEMENT

பாபநாசம் அருகே லாரி மோதியதில் பலத்த காயமடைந்த  ஜவுளிக்கடை ஊழியர் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். 
பாபநாசம் அருகே வளர்த்தாமங்கலம் கிராமம், கீழத் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (45). இவர் கும்பகோணத்திலுள்ள  ஒரு ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தாராம். இவரது மனைவி விஜயலெட்சுமி. இத்தம்பதிக்கு மூன்று மகன்கள்,  ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கஜேந்திரன் வியாழக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் பாபநாசம் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாராம். 
பாபநாசம்-சாலியமங்கலம் பிரதான சாலையில், பெட்ரோல் பங்க் அருகே கஜேந்திரன் வந்தபோது, அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த கஜேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர்,  தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு உயிரிழந்தார். 
புகாரின்பேரில்,  பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT