தஞ்சாவூர்

பேராவூரணி அருகே  தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சுகாதார ஆய்வாளர்

7th Sep 2019 10:45 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே சுகாதார ஆய்வாளர் ஒருவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது வெள்ளிக்கிழமை  தெரிய வந்தது. 
மதுரை மாவட்டம், கீழப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (31). 2014ஆம் ஆண்டு சுகாதார ஆய்வாளராக (கிரேடு-2) பணியில் சேர்ந்த இவர் பேராவூரணி வட்டம், செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிந்து வருகிறார்.  கடந்த 15 நாள்களாக விடுப்பில் சென்றுவிட்டு, புதன்கிழமை மீண்டும் பணிக்கு திரும்பிய அவர்,  தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு,  குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பில் மயங்கி கிடந்துள்ளார். அவரை சக ஊழியர்கள் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுகாதார ஆய்வாளர் பணி தொடர்பாக அண்மையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின் காரணமாகவே கருப்பசாமி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT