தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை பகுதிகளில்  தூர்வாரும் பணிகள்: ஆட்சியர் ஆய்வு 

7th Sep 2019 10:23 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பட்டுக்கோட்டை வட்டம்,  நரியாற்றில் 7,500 மீட்டர் முதல் 8,875 மீட்டர் மற்றும் 11,850 மீட்டர் முதல் 13,050 மீட்டர் வரையிலும் ரூ.12.75 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித் துறை மூலம் தூர்வாரப்பட்டு வருவதை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல,  பட்டுக்கோட்டை அருகே அக்னியாற்றில் தூர்வாருவதையும்,  மடத்திக்காடு தடுப்பணை அருகில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 0.210 கி.மீ. முதல் 0.450 கி.மீ. வரையிலும் பொதுப்பணித் துறை மூலம் தூர்வாரப்பட்டு வருவதையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூர்வாரும் பணியின்போது கரைகளைப் பலப்படுத்தவும்,  கரைகளின் வெளிப்புறத்தில் மரக்கன்றுகளை நடவும்,  பணிகளை விரைவாகவும்,  தரமாகவும் முடிக்க வேண்டுமெனவும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். 
ஆய்வின்போது,  பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் கனிமொழி,  உதவிப் பொறியாளர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT