தஞ்சாவூர்

குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

7th Sep 2019 10:26 AM

ADVERTISEMENT

 பேராவூரணி அருகேயுள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வீ. மனோகரனுக்கு நல்லாசிரியர் விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டது. 
சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில்,  ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவில் குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வீ. மனோகரனுக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
விருது பெற்ற தலைமையாசிரியர் வீ.மனோகரனை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், லயன்ஸ், ரோட்டரி, வர்த்தக சங்க நிர்வாகிகள், கிராமத்தினர் மற்றும் சக ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT