தஞ்சாவூர்

ஆசிரியர் தின விழா: கோ-ஆப் டெக்ஸில்  சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்

7th Sep 2019 10:24 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் வைரம் கோ - ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ஆசிரியர் தின விழா சிறப்புத் தள்ளுபடி விற்பனை வியாழக்கிழமை மாலை தொடங்கியது.
இந்த விழாவுக்கு தஞ்சாவூர் வட்டாரக் கல்வி அலுவலர் எஸ். ரமாபிரபா தலைமை வகித்தார். ஆசிரியர் தின விழாவையொட்டி, தொடர்ந்து, செப். 14-ம் தேதி வரை அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என கோ-ஆப் டெக்ஸ் அலுவலர்கள் தெரிவித்தனர்.
கோ ஆப் டெக்ஸ் மேலாளர் ஆர். சீனிவாசன், துணை மண்டல மேலாளர் மு. அன்பழகன், ரக மேலாளர் ஆர். வெங்கடாஜலபதி, விற்பனை நிலைய மேலாளர் பி. புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT