தஞ்சாவூர்

அனைத்திந்திய கராத்தே போட்டி: பட்டுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர் சிறப்பிடம்  

7th Sep 2019 10:24 AM

ADVERTISEMENT

ஹரியாணா மாநிலம்,  ஹிசாரில் பள்ளி மாணவர்களுக்கான 7ஆவது அனைத்திந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 31ஆம் தேதி  நடைபெற்றது. இதில்,  அகில இந்திய அளவில் 8 மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில்,  தமிழ்நாடு சார்பில் 55 கிலோவுக்குள்பட்ட உடல் எடை பிரிவில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 1 வகுப்பு மாணவர் நரேன் பாலாஜி கலந்து கொண்டு 2ஆம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். அதற்காக இவருக்கு வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் பரிசளிக்கப்பட்டது. இதையொட்டி, மாணவர் நரேன் பாலாஜிக்கு பட்டுக்கோட்டை டிஎஸ்பி எஸ்.கணேசமூர்த்தி வியாழக்கிழமை பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT