தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் அருகே 36 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

7th Sep 2019 10:27 AM

ADVERTISEMENT

அதிராம்பட்டினத்தில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 36 விநாயகர் சிலைகள் ஊர்வலம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. 
அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை இந்து முன்னணி அமைப்பின் அதிராம்பட்டினம் நகரத் தலைவர் ஹரிகரன், துணைத் தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில், தஞ்சை மாவட்ட பொதுச் செயலர் விஜயகுமார்,  செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், மாநிலப் பொதுச்செயலர் அரசு.ராஜா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.  அதிராம்பட்டினம் பேருந்து நிலையம்,  கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக  ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட 36 விநாயகர் சிலைகளும் ஏரிப்புறக்கரை கடலில் வியாழக்கிழமை இரவு கரைக்கப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT