தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு

7th Sep 2019 10:25 AM

ADVERTISEMENT

அதிராம்பட்டினத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மனைவி சுமித்ரா (32). கணவர் வெளிநாட்டில் உள்ளதால் இவர் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், உறவினரின் திருமணத்துக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை பிற்பகல் சுமித்ரா வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத 2 பேர் சுமித்ராவைத் தாக்கி, அவர்  அணிந்திருந்த 15 பவுன் நகைகள்,  செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறித்துச் சென்றனராம். இதுகுறித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT