தஞ்சாவூர்

21 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது

4th Sep 2019 08:57 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் திங்கள்கிழமை விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 21 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸார் பறிமுதல் செய்து, இளைஞரையும் கைது செய்தனர்.
தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, வடக்கு வாசல் கங்கா நகர் பகுதியில் உள்ள கருப்பையா வீட்டில் மேற்கு போலீஸார் திங்கள்கிழமை சோதனையிட்டனர். அப்போது, 21 கிலோ கஞ்சா விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. 
இதுதொடர்பாக கருப்பையாவின் மகன் சுவாமிநாதனை (28) போலீஸார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கெனவே 4 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
7 பேர் கைது:  மேலும், கோட்டைமேடு மேலஅலங்கத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி, சேப்பனாவாரியைச் சேர்ந்த சிலம்பரசன், வடக்கு வாசல் பொந்திரிபாளையத்தைச் சேர்ந்த விஜயன், வெங்கடேசன், ஏ.வி. பதி நகரைச் சேர்ந்த அஜித், மேல லயன் தெருவைச் சேர்ந்த முருகன், ஏ.ஒய்.ஏ. நாடார் தெருவைச் சேர்ந்த வருண் ஆகியோரையும் குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டதாகக் கூறி மேற்கு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT