தஞ்சாவூர்

1808 அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்லிடப்பேசிகள்: அமைச்சர், எம்.பி. வழங்கினர்

4th Sep 2019 08:56 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் 1,808 அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பார்வையாளர்களுக்குச் செல்லிடப்பேசிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
தஞ்சாவூரில் நீர் மேலாண்மை இயக்கத்தின் (ஜல் சக்தி அபியான்) சார்பில் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இப்பேரணியை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு தொடங்கி வைத்தார். 
முன்னதாக, தொடக்க விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம்,  ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஆகியோர் விவசாயிகளுக்கு மானிய உதவித் திட்டங்களை வழங்கினர். மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்குச் செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டது. அப்போது, அமைச்சர் பேசியது:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம் 1,808 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்குச் செல்லிடப்பேசி வழங்கப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள காவிரி நீர் கடைமடைப் பகுதி வரை சென்றடைந்துள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குடிமராமத்து மற்றும் தூர் வாரும் பணிகள் மூலம் நீர் மேலாண்மையில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது என்றார் அமைச்சர்.
பின்னர், அனைத்து வட்டார விவசாயிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள், வேளாண்மைத் துறை அலுவலர்கள் உட்பட 500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட பேரணி தெற்கு வீதி, மேல வீதி வழியாக அரண்மனை சங்கீத மகாலை அடைந்தது. 
இதையடுத்து, நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, வேளாண்மை இணை இயக்குநர் க. நெடுஞ்செழியன், ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி முதல்வர் எஸ். ராஜேந்திரன், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் எம். ராமசுப்பிரமணியன், உதவி பேராசிரியர் ராஜா ரமேஷ், காட்டுத்தோட்டம் மண், நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத் தலைவர் எஸ். பொற்பாவை உள்ளிட்டோர் பேசினர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி. மந்திராசலம், மாநகராட்சி ஆணையர் பு. ஜானகி ரவீந்திரன்,  வேளாண்மைத் துறைத் துணை இயக்குநர் அ. ஜஸ்டின், உதவி இயக்குநர்கள் எஸ். அய்யம்பெருமாள், ரா. சுதா, ரா. சாருமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT