தஞ்சாவூர்

விவசாயிகளுக்கு துல்லிய பண்ணைய காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

4th Sep 2019 08:55 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் விவசாயிகளுக்கு கண்டுணர்வு சுற்றுலா மூலம் துல்லிய பண்ணைய காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் காட்டுத்தோட்டத்தில் உள்ள மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம்,  தமிழ்நாடு நீர்வள-நிலவளத் திட்டத்தின் கீழ்,  காவிரி பாசன பகுதிகளில் துல்லிய பண்ணையம் முறையில் காய்கறிகள் சாகுபடி பரவலாக்கம் மற்றும் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சியில்  திங்கள்கிழமை  கண்டுணர்வு சுற்றுலா  மூலம் பூதலூர் வட்டத்திலுள்ள பாளையப்பட்டி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த 25 விவசாயிகள் பங்கேற்றனர்.  
இந்தத் திட்டத்தில் முன்னதாகவே இணைந்துள்ள இந்த விவசாயிகள், நிகழாண்டில் சொட்டுநீர் பாசனம் மூலம் துல்லிய பண்ணைய காய்கறி சாகுபடி செய்து கொண்டிருக்கும் விவசாயிகளின் வயல்களை பார்வையிட்ட பிறகு,  தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இப்பயிற்சியில் தஞ்சாவூர் மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் பொற்பாவை,  காவிரிப் பாசனப் பகுதியில் துல்லிய பண்ணைய முறையில் காய்கறிகள் சாகுபடி செய்வது பற்றியும்,  அதன் பயன்பாடுகள் பற்றியும் விவசாயிகளிடையே விளக்கி கூறினார். 
தமிழ்நாடு நீர்வள-நிலவளத் திட்டத்தின் பொறுப்பாளர் மு. பாபு,  சொட்டுநீர் பாசனம் மூலம் நீரில் கரையும் உரங்களை பயன்படுத்தும் முறை மற்றும் பயன்கள் பற்றி விளக்கமளித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT