தஞ்சாவூர்

ரயில்களில் விதிமீறல்: 22 பேர் மீது வழக்கு

4th Sep 2019 08:54 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் ரயில்களில் விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி 22 பயணிகள் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
தஞ்சாவூரில் ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். அப்போது, ரயில்களில் பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் புகைப்பிடிப்பது, குடிபோதையில் பயணம் செய்வது, ஓடும் ரயிலில் ஆபத்தான வகையில் செல்பி எடுப்பது, ரயில்களில் பயணிகள் ஏறுவதற்கு இடையூறாகப் படிக்கட்டுகளில் நிற்பது என 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 
இதையடுத்து, இவர்களுக்கு மொத்தம் ரூ. 6,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT