தஞ்சாவூர்

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தைக் கண்டித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

4th Sep 2019 08:58 AM

ADVERTISEMENT

புதிய மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து தஞ்சாவூரில், வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து தஞ்சாவூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனர். பின்னர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர் சங்க அலுவலகம் அருகிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, வாயிலுக்குச் சென்றனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கீழமை நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் அ. நல்லதுரை தலைமை வகித்தார். வழக்குரைஞர் சங்கத் தலைவர் குமரவேல், செயலர் கீர்த்திவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நல்லதுரை தெரிவித்தது:
புதிய மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் 149-வது பிரிவை நீக்க வேண்டும். சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வழக்கில் வழக்குரைஞர்கள் தேவை இல்லை என்ற புதிய திட்டத்தைச் சட்டமாகக் கொண்டு வந்துள்ளனர். 
இது மக்கள் விரோத,  வழக்குரைஞர்கள் விரோத சட்டமாகும். எனவே,  இந்தச் சட்டத் திருத்தத்தை நீக்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். மேற்கு வங்க அரசு இந்தச் சட்டத் திருத்தத்தை ஏற்கமாட்டோம் எனக் கூறி உள்ளது. அதேபோல, தமிழக அரசும் ஏற்கக்கூடாது என்றார் அவர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT