தஞ்சாவூர்

மாநில இறகுப் பந்து போட்டிக்கு எஸ்.இ.டி. பள்ளி மாணவர்கள் தேர்வு

4th Sep 2019 08:54 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான இறகுப் பந்துப் போட்டிக்கு எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்திய தேசிய போட்டிகளுக்கு பள்ளி கல்வி துறையின் சார்பில் நடத்திய மாநில அளவிலான இறகுப் பந்து தெரிவு போட்டி திருவாருர் மாவட்ட எஸ்டிஎடி ஸ்டேடியத்தில் கடந்த 31ஆம் தேதி நடைபெற்றது. இதில் தஞ்சாவூர்,  திருவாருர் , திருச்சி,  புதுக்கோட்டை ,  மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 5 பேர் தமிழக அளவிலான இறகு பந்து போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுவர். 
இந்தப் போட்டியில் யு-14 ஒற்றையர் பிரிவில் பட்டுக்கோட்டை வட்டம் அலிவலம்  எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் ஸ்வஸ்திக் முதலிடமும்,  யு-17 ஒற்றையர் பிரிவில் 10ஆம் வகுப்பு மாணவர் நா.தருண் நான்காம் இடமும் பிடித்து பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் முதல் முறையாக ஒரே பள்ளியை  சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.  வெற்றி பெற்ற மாணவர்களை எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் பள்ளி நிர்வாக இயக்குநர் எல்.கோவிந்தராஜ்,  முதல்வர் ராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள்,  பாராட்டினர். மாணவர்கள் இரண்டு பேருக்கும் பரிசுகள் வழங்கி மேலும் மாநில அளவில் சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்க்க வாழ்த்து தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT