தஞ்சாவூர்

மகள் மர்மச் சாவு: போலீஸில் பெற்றோர் புகார்

4th Sep 2019 08:54 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே செவ்வாய்க்கிழமை தூக்கிட்ட நிலையில் மகள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர்.
கும்பகோணம் அருகே திருமங்கலக்குடி ஜாகிர் உசேன் தெருவைச் சேர்ந்தவர் முகமது காபூஸ். இவரது மனைவி காபத் நிஷா (25). இவர்களுக்குக் குழந்தை இல்லை. துபையில் வேலை பார்த்து வந்த முகமது காபூஸ் 20 நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். இந்நிலையில் வீட்டில் காபத் நிஷா செவ்வாய்க்கிழமை தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்துள்ளார். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காபத் நிஷாவின் பெற்றோர் புகார் செய்துள்ளனர். இதன் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT