தஞ்சாவூர்

பேராவூரணி அருகே விவசாய குழுக்களுக்கு பயிர்க்கடன் அளிப்பு

4th Sep 2019 08:55 AM

ADVERTISEMENT

பேராவூரணி அருகே உள்ள பள்ளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயக் குழுக்களுக்கு பயிர்க் கடன் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு பேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசு தலைமை வகித்தார். தஞ்சாவூர் மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், 30 விவசாய குழுக்களுக்கு  மொத்தம் ரூ. 70 லட்சம் பயிர்க்கடன் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் எஸ். நீலகண்டன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் நாடியம் சிவ. மதிவாணன்,  இரண்டாம்புளிக்காடு கணேசன்,  ஆண்டிக்காடு நாகூரான், சொக்கநாதபுரம் அன்புச் செல்வம்,  மற்றும் கே.எஸ். வினோத்,  கூட்டுறவு வங்கி கள மேலாளர் சிவசாமி,  மேற்பார்வையாளர் குமரன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக,  பள்ளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வே. கூத்தலிங்கம் நன்றி கூறினார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT