தஞ்சாவூர்

பாபநாசத்தில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்

4th Sep 2019 08:57 AM

ADVERTISEMENT

பாபநாசம் பகுதியில் 15 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் புதன்கிழமை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கபிஸ்தலம் பகுதி பாலக்கரை காவிரி ஆற்றில் கரைக்கப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, பாபநாசம் விஸ்வரூப விநாயகர் கமிட்டி சார்பில் பாபநாசம் பகுதியில் பாபநாசம் பழைய, புதிய பேருந்து நிலையங்கள்,திருப்பாலைத்துறை, வங்காரம்பேட்டை, 108 சிவாலயம்,  ராஜகிரி, கோவில்தேவராயன்பேட்டை உள்பட 15 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலம் புதன்கிழமை மாலை நடைபெறுகிறது. விநாயகர் சிலைகள் திருப்பாலைத்துறையில் தஞ்சாவூர்- கும்பகோணம் பிரதான சாலையிலிருந்து புறப்பட்டு  ஊர்வலமாக சென்று கபிஸ்தலம் காவிரி ஆற்றில் கரைக்கப்படவுள்ளன. 
பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் பாபநாசம் காவல் ஆய்வாளர் நாகரெத்தினம் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT