தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை பூலாங்கண்ணி ஏரியில் தண்ணீர் நிரப்பக் கோரிக்கை

4th Sep 2019 08:58 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை பூலாங்கண்ணி ஏரியில் தண்ணீர் நிரப்ப மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சமூக ஆர்வலர் எஸ்.பி.மணிமாறன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பின்புறம், சிவக்கொல்லை அருகே பூலாங்கண்ணி ஏரி உள்ளது. கல்லணைக் கால்வாயில் இருந்து கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு 10 நாள்களுக்கு மேலாகியும்,  இதுவரை இந்த ஏரிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே சென்று விட்டது. கடந்த ஆண்டும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாக இந்த ஏரியில் நீர் நிரப்ப முடியாமல் போனது. இந்த ஆண்டும் அதேநிலை நீடிப்பது வேதனைக்குரியது.
பூலாங்கண்ணி ஏரிக்கு தண்ணீர் நிரப்பினால் அருகிலுள்ள சிவக்கொல்லை,  நைனாங்குளம், பழைய முதல்சேரி ஆகிய கிராமங்களில்  நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, குடிநீர் பிரச்னை தீர்வதுடன், விவசாயப் பயன்பாட்டுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
எனவே,  ஆட்சியரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இனியும் காலம் தாழ்த்தாமல், நீர்வரத்துக் கால்வாயை உடனடியாக தூர்வாரி, சுத்தம் செய்து பூலாங்கண்ணி ஏரிக்கு தண்ணீர் நிரப்பித் தந்து, இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT