தஞ்சாவூர்

செப்.10-இல் ஆர்ப்பாட்டம்: காவிரி படுகை பாதுகாப்புக் கூட்டியக்கம் முடிவு

4th Sep 2019 08:53 AM

ADVERTISEMENT

காவிரி படுகையைப் பாதுகாக்க வலியுறுத்தி போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூரில் செப்டம்பர் 10ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என காவிரி படுகை பாதுகாப்புக் கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இக்கூட்டியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஜனநாயக உரிமைக்காகவும், காவிரி டெல்டாவை பாதுகாக்கவும் போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் கருத்துக்களைக் கேட்காமல் நிலத்தடியில் எண்ணெய் கொண்டு செல்லும் வகையில் குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் செப். 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஆட்சியரையும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டது. 
இக்கூட்டத்துக்குச் சமவெளி விவசாயிகள் இயக்க நிர்வாகி சு. பழனிராசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், செயலர் என்.வி. கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாவட்டத் தலைவர் வீர. மோகன், செயலர் சு. பாலசுந்தரம், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அயனாபுரம் சி. முருகேசன், திமுக விவசாய அணி பி. கோவிந்தராஜ், தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கோ. திருநாவுக்கரசு, கம்யூனிஸ்ட் மா.லெ. மக்கள் விடுதலை மாவட்டச் செயலர் இரா. அருணாசலம், மக்கள் அதிகாரம் ராவணன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், கரும்பு விவசாயிகள் சங்கம் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT