தஞ்சாவூர்

சிலை முறைகேடு வழக்கு: மீண்டும் பணி கோரி கூடுதல் ஆணையர் குடந்தை நீதிமன்றத்தில் ஆஜர்

4th Sep 2019 08:58 AM

ADVERTISEMENT

கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை முறைகேடு வழக்குத் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் மீண்டும் பணி வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை ஆஜரானார். 
சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் 2004-ம் ஆண்டு குடமுழுக்கு விழாவுக்காகத் திருப்பணி நடைபெற்றது. 
அப்போது புன்னை வனநாதர் சன்னதியில் சிவனுக்கு பூஜை செய்யும் மரகதத்தால் ஆன மயில் சிலை இருந்தது. இந்தச் சிலை மாற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.
இந்த மயில் சிலையைத் திருடி விற்றதாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸில் ரங்கராஜ நரசிம்மன் புகார் செய்தார். இது தொடர்பாக அப்போதைய கோயில் செயல் அலுவலராகப் பணியாற்றிய, கூடுதல் ஆணையர் திருமகள் 2018, டிச. 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். 
இதையடுத்து, திருமகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த திருமகள், தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும்,  ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 
இது தொடர்பாக வழக்கு நடைபெறும் கும்பகோணம் நீதிமன்றத்தை அணுகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி,  கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மாதவராமானுஜம் முன் திருமகள் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். 
இதேபோல, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அலுவலர் பொன். மாணிக்கவேலும் ஆஜராகி தன்னுடைய வாதங்களை முன்வைத்தார். பின்னர், இந்த விசாரணை செப்டம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT