தஞ்சாவூர்

கால்வாயில் மூழ்கிய 3 மாணவர்கள் மீட்பு

4th Sep 2019 08:56 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் (புது ஆறு) செவ்வாய்க்கிழமை மாலை குளிக்கச் சென்றபோது அடித்து செல்லப்பட்ட 3 மாணவர்களைப் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர்.
தஞ்சாவூர் பெரியகோயில் அருகேயுள்ள கல்லணைக் கால்வாய் படித்துறையில் செவ்வாய்க்கிழமை மாலை நகரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் மனோஜ் (14), வில்லியம் (14), விஜய் ராகுல் (14) ஆகியோர் குளிப்பதற்காக இறங்கினர். அப்போது, நீரோட்டம் வேகமாக இருந்ததால், மூவரும் அடித்து செல்லப்பட்டனர். 
ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை பின்புறமுள்ள கல்லணைக் கால்வாயில் செடியைப் பிடித்துக் கொண்டனர். ஆனால், இவர்களால் கரையேற முடியவில்லை. தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று மனோஜ், வில்லியம், விஜய் ராகுல் ஆகியோரை மீட்டனர். இவர்களில் மனோஜ் நீரில் மூழ்கியதால் மயக்கமடைந்து உயிருக்குப் போராடினார். பின்னர், மனோஜூக்கு தீயணைப்பு வீரர்கள் முதலுதவி சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து, அவருக்கு மயக்கம் தெளிந்தது.
இதையடுத்து, இவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மேற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT