தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் 27.5 மி.மீ. மழை

4th Sep 2019 08:59 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரத்தநாட்டில் 27.5 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை மாலை பலத்த மழையும், மிதமான மழையும் பெய்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
ஒரத்தநாடு 27.5, நெய்வாசல் தென்பாதி 23.4, குருங்குளம் 19, தஞ்சாவூர் 18, பேராவூரணி 16.2, அதிராம்பட்டினம் 15.5, ஈச்சன்விடுதி 15.2, பூதலூர், வெட்டிக்காடு தலா 10.8, வல்லம் 7, பாபநாசம் 6, பட்டுக்கோட்டை 3.2, மதுக்கூர் 2, கும்பகோணம் 1.6.
பட்டுக்கோட்டையில்: பட்டுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு சுமார் அரை மணி நேரம் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT