தஞ்சாவூர்

அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

4th Sep 2019 08:57 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன், பாலியல் வன்முறைகளைத் தடுக்கக் கடுமையான சட்டங்களை இயற்ற வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெண்கள் மீதான வன்முறைகள், பாலியல் வன்முறைகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். பெண்களை இழிவாகப் பேசுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்குக் கல்வி வேண்டாம், வேலை வேண்டாம் எனக் கூறி மனு தர்மத்தை தூக்கிப் பிடிக்கும் தலைவர்களைக் கண்டித்தும்,  உணவு பாதுகாப்பு மசோதா, புதிய கல்விக் கொள்கை, விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சீரழிவு, பொதுத் துறைகளைத் தனியார்மயமாக்குவது, பொலிவுறு நகரத் திட்டம் ஆகியவற்றை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கத்தின் மாநகரச் செயலாளர் வசந்தி தலைமை வகித்தார். மாநிலச் செயலர் பொன்னுத்தாய் பேசினார். மாவட்டச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவர் ஆர். கலைச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் எம். மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT