தஞ்சாவூர்

415 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்

5th Oct 2019 11:18 PM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 415 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது.

சமூக நலத்துறை சாா்பில் அண்மையில் நடைபெற்ற விழாவுக்கு பட்டுகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.சேகா் தலைமை வகித்து, ரூ.1.31 கோடி மதிப்புள்ள 3,320 கிராம் தங்கத்தை 415 பயனாளிகளுக்கு வழங்கிப் பேசினாா்.

மாவட்ட சமூக நல அலுவலா் கே. ராஜேசுவரி, பட்டுக்கோட்டை கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் இரா.காா்த்திகேயன், முன்னாள் தலைவா் பி. சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை பால் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் சுப.ராஜேந்திரன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT